தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள் கோயில்கள் வீடுகள் என அனைத்து இடங்களிலும்
தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு சிறப்பாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையம் காவலர்கள் சார்பாக பொங்கல் இட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது காவல் அலுவலகம் முன்பு ரங்கோலி கோலம் இட்டு கரும்புகள் வாழை மா இலை தோரணமிட்டு மற்றும் அலங்கார தோரணங்களுடன் காவல் நிலையத்தை அலங்கரித்து இருந்தனர்
இதில் பாரம்பரிய முறைப்படி மகளிர் காவலர்கள் புடவை அணிந்தும் ஆண் காவலர்கள் வேட்டி சட்டை அணிந்தும் குலவையிட்டபடி பொங்கல் பானையில் பச்சரிசி வெல்லம் முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொண்டு பொங்கல் வைத்தனர் இதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி பழங்கள் பொங்கல் பனங்கிழங்கு கரும்பு உள்ளிட்டவற்றை படைத்து தீபாரதனை காட்டி அனைவரும் வழிபட்டு மகிழ்ந்தனர்
அதன் பின்னர் ஆண் ,பெண் என இரு பிரிவினருக்கும் கயிறு இழுத்தல் போட்டி பன்,முறுக்குசாப்பிடும், போட்டி வைத்து இதில் அனைத்து காவலர்களும் ஆர்வத்துடனும்மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர்போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு
வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் இந்த பொங்கல் திருவிழாவை முன்னின்று இந்நிகழ்வை நடத்தி மகிழ்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் அவர்களும்சக்திவேல் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் முருகன் பஞ்சவர்ணம் சத்தியசீலன் சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் காவல் துறையை சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டு தை திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.