சி.என். அண்ணாதுரை
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுசீரமைப்பு 2024 புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பம் பெறுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட விசிக அலுவலகத்தில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மறுசீரமைப்பு செய்ய அக்கட்சி தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு கட்டமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்புக்கு வர விரும்புகிறவர்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் விசிக மத்திய மாவட்ட அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்ப மனு பெறும் நிகழ்ச்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து , மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேலிடப் பார்வையாளர்கள் விசிக சமூக ஊடக செயலாளர் சஜன் பராஜ், மாநில மகளிர் விடுதலை இயக்க துணை செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் விசிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கட்சி பொறுப்புகளுக்கு விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர். இதில் கல்லூரி மாணவர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் திருவுருவப் படத்தை விசிக மத்திய மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஜான்சன் ஏற்பாட்டில், மத்திய மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் முன்னிலையில் மேலிட பார்வையாளர்கள் விசிக சமூக ஊடக செயலாளர் சஜன் பராஜ், மாநில மகளிர் விடுதலை இயக்க துணை செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.