தென்காசி வெதர்மேன் ராஜா தனது வலைப்பதிவில் பதிவிட்டு தகவல்
இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதியில் கடல் அலைகள் தாக்க வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மக்கள் கடற்கரை பகுதிக்கோ மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம். கடல் கொந்தளிப்பு காரணமாக தாழ்வான பகுதிக்குள் கடல் அலைகள் அதிகப்பட்சமாக 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக கடற்கரையில் குளிக்கும் போது மற்றும் விளையாடும் போது தங்களின் பாதுகாப்பு நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார்.