January 15, 2025
#கோவில்பட்டி

கயத்தார் – மதுரை மெயின்ரோடு முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம்

 

கோவில்பட்டி அருகே கயத்தார் – மதுரை மெயின்ரோடு முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் டிச 2-ம் தேதி சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இன்று தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன் வீர வணக்கம் செலுத்த வந்த போது கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் மதுரை மெயின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணை செயலாளர் கரிகாலன், மாவட்ட நிதி செயலாளர் மதிவேந்தன், புதூர் ஒன்றிய செயலாளர் வெள்ளை வேந்தன், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய துணை நிதி செயலாளர் மூக்காண்டி, ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் குருசாமி,நகர செயலாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுப்பவர்களை கயத்தார் காவல் நிலைய போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி காவல் நிலைய கொண்டு சென்றனர். இதனால் மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்ட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.