28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் ஜன.5 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
பதவிக்காலம் முடிய உள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.
பதவிக்காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில் சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.