கோவில்பட்டி அருணாசலம் பேட்டை, அறிவுத்திருக் கோவில் கூட்ட அரங்கில் மெளனம் எனும் ஆழ்தியான பயிற்சி நடந்தது.
பேராசிரியர் சரமாரிராஜ். அனைவரையும் வரவேற்றார். அருள்நிதி விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் விஜி கலந்து கொண்டு மெளனம் எனும் ஆழ்தியான பயிற்சியின் நோக்கம், வலிமை,உடல் ஆற்றல் மேன்பாடு, மனமகிழ்ச்சி உட்பட பல்வேறு தியான பயிற்சி நேரடி விளக்கம் அளித்தார்.
தவம் பயின்ற அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன்பின் உலகநல வாழ்த்துப்பாடி, மெளன நோன்பு இனிதே முடித்து வைக்கப்பட்டன. பேராசிரியர் சங்கரநாராயணமூர்த்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி மனவளக்கலை மன்றம் மற்றும் ஸ்கை டிரஸ்ட் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.