நாகலாபுரத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விளாத்திகுளம் வருவாய் துறை சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு பகுதியாக நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்தார். விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன்,சங்கரலிங்கபுரம் உதவி எஸ்ஐ முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகலாபுரம் பஜார் பகுதியில் பேரணி தொடங்கி சமத்துவபுரம் வழியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடிவற்றது. பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி சென்று கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த பேரணியில் தேர்தல் பிரிவு ஆர்ஐ மலையாண்டி,புதூர் ஆர்ஐ செந்தில்குமாா்,கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆட்ரின்அதிசயராஜ்,கல்லூரி பேராசிரியர்கள் லீலா,முனியசாமி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகலாபுரத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விளாத்திகுளம் வருவாய் துறை சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு பகுதியாக நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்தார். விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன்,சங்கரலிங்கபுரம் உதவி எஸ்ஐ முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகலாபுரம் பஜார் பகுதியில் பேரணி தொடங்கி சமத்துவபுரம் வழியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடிவற்றது. பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி சென்று கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த பேரணியில் தேர்தல் பிரிவு ஆர்ஐ மலையாண்டி,புதூர் ஆர்ஐ செந்தில்குமாா்,கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆட்ரின்அதிசயராஜ்,கல்லூரி பேராசிரியர்கள் லீலா,முனியசாமி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உட்பட பலர்Kகலந்து கொண்டனர்.