தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன். மாநகராட்சி மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மருத்துகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டிகேஎஸ்.ரமேஷ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர தொழிலாளர் மேம்பாட்டு அணி அமைப்பாளர் முருக இசக்கி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, பொறியாளர் அணி தலைவர் பழனி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஷ்வரன்சிங், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபாலன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, கவுன்சிலர்கள் சரவணக்குமார். விஜயலட்சுமி. கந்தசாமி, ஜெயசீலி, பொன்னப்பன், வைதேகி, நாகேஸ்வரி, பவானி, இசக்கிராஜா, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சிங்கராஜ். சுப்பையா, பாலகுருசாமி. கங்கா ராஜேஷ், மூக்கையா, செல்வராஜ், செந்தில்குமார். வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மார்ஷல் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.