தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள சுதந்திர வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் தெற்கு மாவட்ட துணை தலைவர் வீரபாண்டி செல்லச்சாமி தலைமையில் மாநகர செயளாலர் முருகபூபதி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அவைத் தலைவர் பேச்சி ராஜ், அனல் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாஞ்சை யோகராஜ், நகர துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரைக் கண்ணன் எம்.எல்.எப். காசிராஜன், இளைஞரணி செயலாளர் சரவண பெருமாள், மற்றும் வைகோ தொண்டரணி பொய்யாமொழி மற்றும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.