விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி(213),விளாத்திகுளம் வட்டம் மற்றும் கிராமத்தில் 15வது தேசிய வாக்காளர் தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுவது தொடர்பாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
வாக்குச்சாவடிகள்,கல்லூரி மற்றும் பள்ளிகளில் கோலப்போட்டி, பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்துவது தொடர்பாகவும், மனித சங்கிலி, பேரணிகள் நடத்துவது தொடர்பாக தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் அறிவுரைகள் வழங்கினார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதற்கு அமைவிடத்தின் அடிப்படையில் ரூ 500 வழங்கப்பட்டது. மேலும் அதனுடன் சேர்த்து படிவங்கள், பதாகைகள், போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகள் ஆகியவையும் வழங்கப்பட்டது.வாக்காளர் தின நாள் அன்று அனைவரும் வாக்காளர் தின உறுதி மொழி எடுத்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் மலையாண்டி, எபிக் ஆப்பரேட்டர்கள் பாரதிசெல்வன், மாலதி,அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்