விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் பிள்ளையார் நத்தம் கலுகாசலபுரம் படர்ந்த புலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது பின்னர் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக காட்டுப்பகுதியில் பெய்த மழையால் காட்டாற்று மழைநீர் விளாத்திகுளம் வைப்பாற்றிற்கு வந்துள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல ஆயிர கணக்கிலான விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. விளாத்திகுளம் ராஜூ நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் சூழ்ந்தலால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
கமலாபுரம் அய்யனார்புரம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இதே மாதம் அதிகமான மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர் இதய ஆண்டும் தற்போது அதிக மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்