தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு ஆகியோர் முன்னிலையில் 08.01.25 இன்று நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்;
தமிழ்நாடுமுதலமைச்சர்உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மண்டல வாரியாக வாரந்தோறும் நடைபெறுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பெறப்படும் மனுக்களில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பிளாஸ்டிக் பை, குப்பைகளை கழிவுநீர் கால்வாய்கள், ஓடைகளில் போடுவதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது ஆகவே கால்வாய் மற்றும் ஓடைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை போடக்கூடாது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தும், உபயோகத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 16, 17, 18 வார்டுகளில் வடிகால்கள் அமைக்கும் பணி 90 விழுக்காடு முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 விழுக்காடு பணிகள் விரைவில் முடிக்கப்படும். சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது இதுவரை 50 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கால்நடைகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். முகாமில்தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சேமா.சந்தனராஜ் , மாவட்ட செயலாளர் முகமது அசன் ஆகியோர், மேயரிடம் அளித்த மனுவில் “தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக அங்கு வங்கி ஏடிஎம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் பேசி வருகிறோம் விரைவில் ஏடிஎம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும், மேலும் மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த விரைவில் ஏற்ப்பாடு செய்யப்படும் என்று மேயர் தெரிவித்தார்.
முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் ரங்கநாதன், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சரவணகுமார், ராமர், சந்திரபோஸ், விஜயலட்சுமி, கந்தசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், போல்பேட்டை பகுதி செயலாளர் பிரபாகரன், வட்ட செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.