விளாத்திகுளம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
முகாமின் ஒரு பகுதியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்( திருநெல்வேலி மண்டலம் ) வில்லியம் ஜேசுதாஸ் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரில் குளோரிநேஷன் செய்யும் பணி,பேரூராட்சிகளின் வளம் மீட்பு பூங்காக்களில் நடைபெற்று வரும் உரம் தயாரித்தல் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார்,உதவி பொறியாளர் முத்துக்குமாரசுவாமி உட்பட பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.