தூத்துக்குடி மினி மராத்தான் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் இதில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார்.
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம் கே சின்னத்துரை அண்ட் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சத்யா குழுமம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சைன் யோகா பவர் இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பிருந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் தமிழன்டா இயக்க துணை பொதுச் செயலாளர்கள் திருமணி ராஜா, மாரிமுத்து, உடற்கல்வி இயக்குனர் முனைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியம், காமராஜ் உடற் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆனந்த், கணேஷ் குமார், புதுக்கோட்டை பாரதி சிலம்பாட்ட கழக தலைவர் மாரியப்பன் மற்றும் மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மினி மராத்தான் ஓட்டம் பாளை ரோடு எம்ஜிஆர் பூங்கா, ராஜாஜி பூங்கா, பழைய பேருந்து நிலையம், ஜின் பேக்ட்ரி, தேவர்புரம் ரோடு வழியாக மீண்டும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.
இப் போட்டியில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் மாதேஷ் முதல் இடத்தையும், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாமுவேல் இரண்டாம் இடத்தையும். மாணவர் மாதேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இதில் முகேஷ், சஞ்சய் குமார்,அஸ்வின், ராஜ கோபாலன், அஸ்வின், சுதர்சன், தேவராஜ், சக்தி காந்த், அய்யனார் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.