சி.என்.அண்ணாதுரை
தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். அபிராமிநாதன் தலைமையில், மாநகர திமுக செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பிரபு. அந்தோணி கண்ணன், பழனி குமார், நாகராஜன், அருணா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார். முகாமில் ரத்ததானம் செய்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் திமுகவினருக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.எம்.மதியழகன், தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ்.ரமேஷ், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் வைதேகி, ஸ்ரீதர், கரன் குமார், அருணா, ஹரிகரன், கற்பகம், பகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஜோயல், சஞ்சய், மார்கின் ராபர்ட், சந்தானம், பிரிஸ்கா, ஆனந்த், சம்சுகனி, ஹரிபாலா மற்றும் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தொகுதி சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் துரை நன்றி கூறினார். இரத்ததான முகாம் ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சாந்தி மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.