தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ ஆகியோர் நலத்திட்டங்களை வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில் புத்தாடை மற்றும் மதிய உணவு வகைகளை வழங்கினார்.
மேலும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் பிஸ்கட் மற்றும் பழவகைகளை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதக் கண்ணன், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சௌந்தரராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி சங்கரநாராயணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வார்டு உறுப்பினர்கள் பியூலா ராணி, ஜெயலட்சுமி, மணிகண்டன், ராமர், தங்கம்மாள் கல்லடிவீரன், மணிகண்டன், ராமலட்சுமி காளிமுத்து, குமார், முருகலட்சுமி இளங்கோ, விஜயலட்சுமி முத்துக்குமார், மாதவன், எட்டையாபுரம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் ராம்குமார், பிச்சை, மஞ்சமாதா, தேவி, அருள்சுந்தர், சின்னப்பர், பிச்சுமணி, மயில்ராஜ், முத்துவேல் தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்ப்பிரியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, பேரூர் கழகம் மகளிர் அணி கோமதி,முருகலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.