தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக
தூத்துக்குடி தெற்கு மண்டல அலுவலகத்தில் 28.11.24 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, முன்னிலை வகித்தனர்.
முகாமில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டு வருகிறோம். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு மண்டலப் பகுதிகளில் முள்ளக்காடு, உப்பாத்து ஓடை தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் மழைநீர் தேங்காது. மழையில் சேதமான சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுவரை 1200க்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. நீர் வழித்தடங்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
முகாமில் மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில், அவைத் தலைவர் பேச்சிராஜ், இளைஞரணி சரவணன், வட்ட செயலாளர் பெருமாள்சாமி, ஆகியோர் அளித்த கோரிக்கை மனுவில் 45 வது வார்டு பிரேம் நகர் 12 மேற்கு பிரதான சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து தரும்படியும், மழைநீர் வடிகால், 11 வது தெரு புதிய தார் சாலையில் நல்ல தண்ணீர் குழாய் உடைப்பை சரிசெய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர் .
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ராஜாராம், நகர் நல அலுவலர் ரங்கநாதன், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) சூரிய பிரகாஷ், உதவி பொறியாளர் காந்திமதி, மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, முத்துவேல், சரவணகுமார், ராஜேந்திரன், பச்சிராஜன், ராஜதுரை, முத்துமாரி, வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.