January 16, 2025
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

உள்ளாட்சி தினம் கிராமசபை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கௌரவிப்பு

விளாத்திகுளம்,உள்ளாட்சி தின கிராமசபை முன்னிட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினம் ஜன.26, உலக தண்ணீர் தினம் மார்ச் 22, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆக.15, காந்தி ஜெயந்தி அக்.2, உள்ளாட்சிகள் தினம் நவ.1 என மொத்தம் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நவ.,1ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவ.,01-ஆம் தேதி விடுமுறையாக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கிராமசபை கூட்டத்தை ஒத்தி வைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர். அதை ஏற்று கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைத்து, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார்.

“மகிழ்வித்து மகிழும் விழா”

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 51 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்களுக்கு “மகிழ்வித்து மகிழும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 51- கிராம ஊராட்சிகளில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்களுக்கு

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், தலைமையில் விளாத்திகுளம் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டமைப்பு சார்பில்  நடைபெற்ற விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல்,  கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன், செயலாளர் சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இவ்விழாவில் 51 ஊராட்சி  சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் பணியாளர்களுக்கு  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி பேசியபோது….

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு துணை தலைவரும், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி தனது ஊராட்சியில் பணியாற்றி பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி, பேசுகையில், எனது தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக  சுகாதாரம், தூய்மை பணிகள் , மற்றும் குடிநீர் வழங்குதல் பணிகளை எனக்கு உறுதுணையாக சிறப்பாக பணியாற்றி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று அனைத்து ஊராட்சி தலைவர்கள் தங்கள் ஊராட்சி பணியாளர்களுக்கு   பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு   சார்பில் அசைவ உணவு தயார் செய்யபட்டு, பணியாளர்களுக்கு வட்டர வளர்ச்சி அலுவலர் தங்கவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களால் பறிமாறப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் (கிராம)

இவ்விழாவில்,ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்,ஊராட்சி செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.