By,C.N.Annadurai
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர திமுக சார்பில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, திரேஸ்புரம் காளவாசல் பகுதியில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்க சிறப்பு தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 3150 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கினார், திரேஸ்புரம் பகுதி செயலாளரும் வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். 8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவானி மார்ஷல், வட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வைத்தனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன், தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ், இருதயராஜ் ஆகியோர் திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு எடுத்துக் கூறினர்.
பின்னர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர், மீனவர்கள் உட்பட 3150 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, இலக்கிய அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி, மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, கந்தசாமி, வைதேகி, சுப்புலட்சுமி, வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, சேகர், சிங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு , நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, 8வதே வட்ட பிரதிகள் மார்ஷல், ஆறுமுகம், அமால்தீன், துணை செயலாளர் அகஸ்டா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஐ ரவி இரா.பிரவீன், பகுதி அமைப்பாளர் எமல்டன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன் , மீனவரணி துணை அமைப்பாளர் ஸ்மைலன் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகேஸ்வரி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், பிரதிநிதி பாஸ்கர் மற்றும் திரேஸ்புரம் பகுதியில் கழக திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட சார்பு அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.