March 13, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் முக்கிய வீதிகளில் புதிய மின் விளக்குகள், வடிகால் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்

CN. அண்ணாதுரை

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் தார்ச்சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய பூங்காக்கள் மற்றும் மகளிர் பூங்கா, சாலையோர பூங்கா அமைத்தல் மற்றும் மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி விவிடி சிக்னல் முதல் காய்கறி மார்க்கெட் சிக்னல் வரையிலும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் முதல் மீனாட்சிபுரம் வரை சாலை எதிர்புரத்தில் நடைபெற்று வரும் புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்;

மழைநீர் தேங்கியுள்ள காலி மனைகளின் உரிமையாளர்களுக்கு மேயர் வலியுறுத்தல், காலி மனைகளின் உரிமையாளர்களின் கவனத்திற்கு முக்கிய வேண்டுகோளை வைக்கிறோம். காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை அதன் உரிமையாளர்கள் மண் இட்டு நிரப்ப வேண்டும் என மாநகராட்சி சார்பில் ஆணையரும், நானும் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். அதன்படி காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை மண் இட்டு நிரப்பிய உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு விதமாக அவர்களை அழைத்து கௌரவப்படுத்தி வருகிறோம். ஏற்கனவே ஒவ்வொரு முறையும் இது குறித்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் பல இடங்களில் காலி மனைகளில் நீர் தேங்கியுள்ள இடங்களின் உரிமையாளர்கள் இந்த அறிவிப்பை கண்டு கொள்வதில்லை. மீண்டும் மீண்டும் காலி மனைகளின் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்வது; உடனடியாக உங்கள் மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை மண் இட்டு நிரப்ப வேண்டும் இதனால்  உங்கள் அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் கட்டுமானத்திற்கு பதிப்பு ஏற்படாது அங்கே ஊற்று நீர் உடனே அடைப்பு ஏற்பட்டு விடும் மேலும்  தற்போது மாநகராட்சி சார்பில் தண்ணீர் வெளியேற்றம்  செய்யபடுகிறது இன்னும்   தண்ணீர் குறைய வேண்டுமென்றால் அருகில் உள்ள காலி மனைகளில் மண் நிரப்ப வேண்டும் என வலியுறுத்துவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான சி.என்.ரவீந்திரன், மின்வாரிய ஊழியர் சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.