By, CN. அண்ணாதுரை
தூத்துக்குடி,தமிழ் மக்களையும், தமிழக எம்பிக்களையும் இழிவு படுத்தி அவதூறாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் அவரது உருவப் படத்தை அடித்து கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் மக்களையும் இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக, மாநகரம் சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் முன்னிலையில் அன்னா பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக எம்பி’க்களையும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் இழிவுபடுத்தி அவதூறாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களை கிழித்து, செருப்பால் அடித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் செ.ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், ரவீந்திரன், நிர்மல் ராஜ், மேகநாதன்
மாவட்ட அணி நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மருத்துவர் அணி அருன் குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவகுமார் செல்வின், ஐ.ரவி, இரா.பிரவீன், சங்கரநாராயணன், பகுதி அமைப்பாளர் சூர்யா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பெல்லா, மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, பாவானி மார்ஷல், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சி ராணி, வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், சிங்கராஜ், பாலு, கதிரேசன், மூக்கையா, சுரேஷ்குமார், சுப்பையா, செல்வராஜ், ஐடி விங் பகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், குமார், ஜேசு, மாநகர சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்கப் தனபால், மகளிரணி ரேவதி, சிறுபான்மை அணி பெனில், ஜான்சன், பகுதி பிரதிநிதிகள் செல்வம், சுகன்யா செந்தில், மதிமுக சார்பில் மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.